ஷாக் நியூஸ்..! ஆபாச படத்திற்கு வாலிபர் அடிமை… 10 ஆண்டில் 18 முறை பாலியல் வழக்கில் கைது…!!!

மும்பையில் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் குறித்து அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விசாரணையில் அந்த இளைஞர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2011 முதல் 2020 வரை, 17 முறை இவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவயதிலிருந்து ஆபாசப் படங்களைப் பார்த்து இந்த இளைஞர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும்  தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *