பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நடித்த போது அதே தொடரில் கதாநாயகராக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து பாதியிலேயே ஆல்யா மானசா விலகினார்.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடிகை ஆலியா மானசாவுக்கு திடீரென விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் நடிகை ஆல்யாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது கட்டு போடப்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக நடிகை ஆலியா மானசாவின் காலில் தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. நடிகை ஆலியா காலில் கட்டோடு சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் வெளியானது. மேலும் நடிகை ஆல்யா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.