வோடாஃபோன் நிறுவனத்தின் 2 பிரீபெய்டு சலுகைகள் நீக்கம்…. வெளியான புதிய தகவல்….!!!!

தொற்று பரவல் காரணமாக கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் டேட்டா பயன்பாடு மற்றும் டெலிகாம் சேவைகளின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெலிகாம் நிறுவனங்கள் வழக்கத்தை விடவும், அதிகமான வருமானத்தையும் வர்த்தகத்தையும் பெற்று வரும் நிலையில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தனது டெலிகாம் தேவை கட்டணத்தை கட்டாயம் உயர்த்தி ஆகவேண்டும் என்று கூறிய நிலையில், சமீபத்தில் ஏர்டெல் ஜியோ நிறுவனங்கள் தங்களுடைய கட்டணத்தை உயர்த்தியது.

இதையடுத்து ஏர்டெல் ஜியோ நிறுவனங்களை தொடர்ந்து வி நிறுவனமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை நீக்கியுள்ளது. அதன்படி நிறுவனத்தின் 601 ரூ மற்றும் 701 ரூ ப்ரீபெய்டு சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இதே பலன்களை வழங்கும் 501ரூ மற்றும் 901ரூ 3,099 க்கான ப்ரீபெய்டு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *