நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருந்த சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

நடிகை சமந்தா ஓரளவுக்கு நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு தற்போது நடிப்பில் வேகம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் கல்லூரி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா சகுந்தலம் என்ற புராண தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் சமந்தா நடித்துவரும் குஷி திரைப்படம் செப்டமப்ர 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும்.