வைகுண்ட ஏகாதேசி… டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

அதன்படி இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் தரிசனத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *