“வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டுத் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்”….. ஆட்சியர் தகவல்….!!!!!

வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை செயல்படுத்த இருக்கின்றது. இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் தனிநபர், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்டோருக்கு 30 சதவீதம் அரசு மானியத்துடன் கடனுதவி அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. வேளாண்மை உணவு சார்ந்த மதிப்பு கூட்டு தொழிலுக்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த உணவு பதப்படுத்தும் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பங்கு பெற்று அவர்களின் வேளாண்மை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைபடுத்தி லாபம் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.