வேளச்சேரி சம்பவம்: விவிபேட் இயந்திரத்தில்…. 15 வாக்குகள் பதிவாகியிருந்தது – தேர்தல் ஆணையம் அதிர்ச்சி…!!!

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. மக்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை வரிசையாக நின்று நிறைவேற்றினர். அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் வாக்களித்தனர். ஒரு சில இடங்களில் வாக்கு பதிவு  தாமதமாக நடைபெற்றது. அதேபோல ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், “வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்று கூறப்பட்ட நிலையில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன என்று தெரிவித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் வாக்கு பதிவு இயந்திரம் எடுத்து செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறல் என்று தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த விவிபேட் இயந்திரம் 50 நிமிடம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *