வேலை வாங்கி தரேன்…. மோசடியில் ஈடுபட்ட இருவர்…. போலீஸ் விசாரணை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ரெபின்  யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசா ஜான்சன் என்ற தந்தை இருக்கிறார். இவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் பெருமாள் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது ரியல் எஸ்டேட் தரகராக இருக்கிறார். இந்நிலையில் ரெபின் யோவானுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பெருமாள் ஜான்சனிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஜான்சன் பெருமாளிடம் 40 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அதன் பின் பணி நியமன ஆணை ஒன்றை பெருமாள் ஜான்சனிடம் கொடுத்துள்ளார். அது போலியான பணி  நியமன ஆணை என்பதும், பெருமாள் பண மோசடியில் ஈடுபட்டதும் ஜான்சனுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜான்சன் ஐ .சி .எப். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெருமாளையும், அவருக்கு உடந்தையாக இருந்த லெனின் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *