வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில் சிங்காரவேடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் புதிதாக கட்டப்படும் வீட்டில் சிங்காரவடிவில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்த போது மின் கம்பியை தூக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பி மேலே சென்ற மின் வயர் மீது பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சிங்காரவடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.