வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விளாரிப்பட்டி தெற்கு தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி கறம்பக்குடி செட்டி தெருவில் மின் பாதையை சீரமைக்கும் பணியை கண்காணித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ரங்கசாமி மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரங்கசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *