தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு பல தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கரூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளின் நலத்துறை சார்பாக 16 தொழில்துறை நிறுவனங்களுடன் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணிநீயமான ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு 35 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தொகையை உதவிகளை செய்து வருவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.