தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குடும்ப ஆண்டு வருமானம் 22 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ www.tnvelaivaaippu.gov.in அல்லது https://tnvelaivaaippu.gov.in அல்லது என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தால் மாதம் 200 ரூபாய்,பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் 300 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 400 ரூபாய், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 600 ரூபாய் உதவி தொகையாக அவர்களின் வங்கி கணக்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.