“வேலையாட்களின் காலிலும் விழுந்து வணங்குகிறோம்”…. நடிகை ராஷ்மிகா நெகிழ்ச்சி….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா.கன்னடத்தில் அறிமுகமாகிய அதன் பிறகு தெலுங்கில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகா தனது வீட்டில் அனைவரையும் சமமாக நடத்துவதாகவும் சமமான மரியாதை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,எங்கள் வீட்டில் பெரியோர் மட்டுமின்றி வேலையாட்களின் காலிலும் விழுந்து வணங்குவேன். ஒருவரை காயப்படுத்துவதும் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதும் பேசும் விதத்தில் தான் உள்ளது. அதனால் யார் என்ன சொன்னாலும் அவற்றைக் கூர்ந்து கவனிப்பேன் என்று கூறியுள்ளார்.