“வேலைக்கு போக முடியவில்லை” என்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டியில் விவசாயியான தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான நவீன்குமார்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாததால் நவீன்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நவீன்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *