“வேலைக்கு தான் போனாரு”, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல…. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மதுரையில் அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்தார்.  இவர் கட்டிடத் தொழிலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அழகர்சாமி சம்பவத்தன்று கட்டிட வேலை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சோழவந்தானிலிருக்கும் நான்கு வழிச்சாலையில் சென்றார்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அழகர்சாமியின் மோட்டார் சைக்கிளை கவனிக்காமல் இடித்துத் தள்ளியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்த அவர் நிலைதடுமாறி அரசு பஸ் சக்கரத்தினுள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.