வேற லெவல்… சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அதிரடியான டீசர் இதோ…!!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் அதிரடியான டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *