கள்ள தொடர்பு வச்சிருக்க…. “நடத்தையில் சந்தேகம்”…. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த கொடூர கணவன்…. கர்நாடகாவில் பரபரப்பு..!!

வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே இருக்கும் கங்கொண்டனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 25 வயதான மோகன் குமார். இவருக்கும் சந்திரகலா என்ற ரஷ்மிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சந்திரகலாவுக்கு 21 வயது ஆகிறது. இருவருக்கும் திருமணம் நடந்த பின் தொடக்கத்தில் இருந்தே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோகன் குமார் மனைவி சந்திரகலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.. மனைவி யாருடன் பேசினாலும் அதனை சந்தேக கண்ணோட்டத்துடனே பார்த்து வந்துள்ளார்.. அது மட்டுமல்லாமல் தனக்கு கூடுதலாக வரதட்சனை தரும்படி கட்டாயப்படுத்தி அடித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.. மனைவிக்கு வேறு நபருடன் தவறான உறவு இருப்பதாக குற்றம் சாட்டி சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார்..

இதனால் மனமுடைந்த சந்திரகலா தன்னுடைய பெற்றோருக்கு கணவனுக்கு தெரியாமல் அடிக்கடி போன் செய்து பேசி வந்திருக்கிறார். பின் ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத சந்திரகலா தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் சந்திரகலாவின் பெற்றோர் திருப்பி கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தான் மோகன் குமார் தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்..

கொலை செய்த பின் சடலத்தை சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள அஜ்ஜாம்புரா அருகில் இருக்கும் ஹுனகட்டா வனப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்துள்ளார்.. இந்த சம்பவம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் நடந்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால் கொலை செய்யப்பட்ட சந்திரகலா 6 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

இதையடுத்து கணவர் மோகன் குமார் சந்திரகலாவின் பெற்றோரிடம் உங்கள் மகள் காணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அவர் வேறு ஒருவருடன் ஓடிவிட்டதாக கூறி கடந்த அக்டோபர் 10ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அதேபோல சந்திரகலாவினுடைய பெற்றோரும்  காவல் நிலையத்திற்கு சென்று தனது மகளை மோகன் குமார் ஏதாவது செய்திருக்கலாம் என சந்தேகத்துடன் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் சந்திரகலா காணாமல் போன நாளன்று மோகன் குமார் தன்னுடைய காரை அதிகாலை 2 மணி அளவில் எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோகன் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய போது, நான் தான் சந்திரகலாவை கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு மாதத்திற்கு முன்பே தனது மனைவியை அவர் கொள்ள சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்திருக்கிறது.

அது மட்டுமில்லாமல் கொலை செய்து விட்டு உடலை எப்படி அகற்றுவது? மற்றும் ஆதாரங்களை எப்படி எல்லாம் அழிப்பது? என திட்டம் போட்டு வந்தததோடு மனைவியை கொலை செய்வதற்கு முன்பே காட்டில் முன்கூட்டியே குழி தோண்டி வைத்திருக்கிறார். இது அனைத்தையும் போலீசார் விசாரணையின் போது வாக்குமூலமாக தந்துள்ளார் மோகன்குமார்.. வரதட்சணை மற்றும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply