வேறு பெண்ணுடன் திருமணம்…. 3-வது நாளிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கொத்தனாரான குமரேசன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக குமரேசனும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த குமரேசனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். கடந்த 23-ஆம் தேதி அதே பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருமணம் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு அந்தப் பெண் வேறு ஒரு வாலிபருடன் ஓடி திருமணம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமரேசனின் பெற்றோர் குறித்த தேதியில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த குமரேசன் திருமணமான 3-வது நாளிலேயே அவரது நிலத்தில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரேசனின் உடலை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.