வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் இருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு நேற்று சுற்றுலா வேன் ஒன்று புறப்பட்டது. இந்த வேனை ரமேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோலியனூர் கூட்டு சாலை அருகே சென்றபோது விறகுகளை ஏற்றிச்சென்ற டிராக்டர் வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் ரமேஷ், சின்னப்பொண்ணு, ஜெயசுந்தரி உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.