வேதா நிலையம் வழக்கு…. சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு….!!

தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை வேதா நிலையம் நினைவகமாக மாற்றப்படும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இதனை செயல்படுத்துவதற்காக சட்டம் இயற்றப்பட்டு, அந்த இல்லத்தின் அசையும் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதனைப்போலவே வேதா நிலையத்துக்கு 67,90,00,000 இழப்பீடாக நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த இரண்டு வழக்குகளையும் நீதிபதி சேஷாசாயி விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துகளை கையகப்படுத்தி சட்டம் இயற்றப்படுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

மேலும் வாரிசுகளான தங்களிடம் ஆலோசனை செய்யாமல் நிலம் கையகப்படுத்தியது தவறு என்று தீபா மற்றும் தீபக் தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழங்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *