வேண்டாம்…! இது வீபரீத விளையாட்டு…. திமுகவை எச்சரிக்கும் பாஜக…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  குருமார்களை தமிழக அரசு திட்டம் போட்டு அவமானப்படுத்துகிறது. ஆதினங்களை அவமானப்படுத்துகிறது, ஆதினங்களை மிரட்டுகிறது. அதற்கு மதுரை ஆதினம் கூட நேர்காணல் கொடுத்திருக்கிறார், இது அனைத்தும் கூட தமிழக அரசு உடனடியாக விபரீத விளையாட்டை கைவிட்டுவிட்டு…..

ஏனென்றால் இவர்களெல்லாம் பிறப்பதற்கு முன்னாடி, இவர்கள் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்னாடி, ஆதினம் இருந்துள்ளது. 2000, 3000 ஆண்டுகளாக இந்த சித்தாந்தம் தமிழக மண்ணில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது புதிதாக என்ன சித்தாந்தத்தை 2022ல் கொண்டு வருவார்கள்.

அப்படி கூறுகிறவர்கள், கலைஞர் மு.கருணாநிதி அவர்களை, ஸ்டாலின் அவர்களே முட்டாள் என்று சொல்கிறாரா ? ஏனென்றால் ஐந்து முறை முதலமைச்சராக இருக்கும்போது அவர் தடை செய்தாரா ? அவர் செய்யவில்லை. அப்படியென்றால் அவருடைய அப்பா முட்டாள் என்று இவரே ஒத்துக்கொள்கிறாரா? என்னுடைய அப்பா முட்டாள் எனக்கு தெரியவில்லை, நான் அறிவாளி நான் செய்கிறேன் என்று..

எனவே முதலமைச்சர் அவர்கள் இதனை திரும்பிப் பார்த்து இந்த விபரீத விளையாட்டுக்கு போகாமல் உடனடியாக ஆதினங்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்து, என்னுடைய கோரிக்கையும் முதலமைச்சரே இதை முன்னின்று நடத்த வேண்டும், அவருடைய கடமை இது. அவர் எல்லா மக்களுக்கும் தான் முதலமைச்சர்.

ஆதினங்கள் முதலமைச்சர், இந்துக்களுக்கு முதலமைச்சர், இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர், கிறிஸ்தவர்களுக்கு முதலமைச்சர் முன்னாலிருந்து நடத்தட்டும். அவர் நான் செக்குலர் நான் அனைத்து மதத்தையும் மதிக்கக்கூடிய முதலமைச்சர் என்று காட்டும். பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக முதலமைச்சருடன் துணை நிற்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *