“வேடச்சந்தூர் அருகே உள்ள கோவிலில் வைகாசி மாத திருவிழா”…. அரிவாள்கள் மீது நின்று பூசாரி அருள்வாக்கு…!!!!!

வேடசந்தூர் அருகே இருக்கும் கோவில் திருவிழாவில் அரிவாள் மீது பூசாரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் அடைக்கனூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ள நிலையில் வைகாசி மாத திருவிழாவானது நேற்று ஆரம்பமானது. திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை இன்று மதியம் நடைபெற்றது.

இதையடுத்து இரண்டு நீளமான அரிவாள்களை இருபக்கமும் பக்தர்கள் பிடித்துக்கொள்ள அதன்மீது பூசாரி அம்மையப்பன் ஏறி நின்று அருள்வாக்கு சொன்னார். இதன்பின் ஆணி அடிக்கப்பட்ட செருப்பை அணிந்து கொண்டும் அருள்வாக்குச் சொன்னார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.