புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த வகையில் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் எண்ணத்தோடு அந்த குற்றம் அரங்கேறியுள்ளது.

முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20-ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.