வேகமாக வந்த கார்… சாலையில் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்…. போலீஸ் கூறிய தகவல்…!!

சாலையில் சென்ற பெண்ணின் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் ரிச்மண்டின் டிவிகென்ஹம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி மாலை மணி அளவில் சாலையில் சென்ற பெண்ணின் மீது வேகமாக வந்த கார் மோதியது. அதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த காவல்துறையினர் கூறுகையில் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் காரின் ஓட்டுனர் அந்த இடத்தில் இருந்தார் எனவும் கூறியுள்ளனர். மேலும் இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.