வேகமாக சென்ற கார்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

சாலையை கடக்க முயற்சி செய்தபோது கார் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன உடைப்பு பகுதியில் ரவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிராஜ் சின்ன உடைப்பு பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ரவிராஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *