“வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்”… கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இருஅணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடருக்காக இந்தியஅணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி போன்றோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒருநாள் தொடருக்கான இந்தியஅணியின் விவரம்: ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *