வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்து… மூதாட்டி உள்பட 2 பேர் பலி… போலீஸ் விசாரணை…!!

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கம்பங்குடி பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மதுரை-தொண்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாகனம் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீதி மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கமுதி அடுத்துள்ள தோப்படைபட்டி பகுதியில் வசித்து வரும் சண்முகதாஸ் என்ற முதியவர் அப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனம் ஒன்று கட்டுபாட்டை இழந்து முதியவர் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகதாஸ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *