வெள்ளை சேலை அணிந்த பெண்கள்… மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…!!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சலுகைபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மாள் மற்றும் பொன்னழகி அம்மாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பெண்கள் வெள்ளை ஆடை அணிந்து அம்மனுக்கு  பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெறுவது  வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவில் மதகுப்பட்டி, கீழத்தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டுள்ளனர் .

அதன்பின்னர் அம்மனுக்கு  கருப்புகள் மற்றும் எலுமிச்சை பழங்களை வைத்து அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது . இதனையடுத்து அம்மனுக்கு படைத்த கரும்பு மற்றும் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்ச விலையாக கரும்பு 15 ஆயிரத்தி501-க்கும்  எலுமிச்சை பழங்கள் அதிகபட்சமாக 4  ஆயிரத்தி 1 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *