வெள்ளி தட்டில் இவ்வளவு இருக்க…? நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

 வெள்ளித் தட்டில் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.

வெள்ளித் தட்டில் சாப்பிடுபவர்களுக்கு பொதுவாக ராஜமரியாதை கொடுக்க தோன்றும். அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வெள்ளித்தட்டில் சாப்பிடுவார்கள் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் வெள்ளித் தட்டில் சாப்பிடுபவர்களுக்கு ராஜ மரியாதையையும் தாண்டி இன்னும் பல நன்மைகள் கிடைக்கின்றது.

  • ஒருவர் தனது உணவை வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அவர் நீண்ட ஆயுளைப் பெறுவார். குழந்தைகளுக்கு வெள்ளி தட்டில் வைத்து உணவு ஊட்டினால் அது குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். வெள்ளி கரண்டி வைத்து சாப்பிடுவதனால் உணவு சத்து நிறைந்ததாக மாறுவதோடு நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  • வெள்ளி பாத்திரத்தில் உணவு சாப்பிடும்போது அது கிருமிகளை அளிக்கின்றது. மேலும் உணவுகள் வெகு நேரம் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றது. வெள்ளித் தட்டில் சாப்பிடுபவர்களுக்கு உணவு விரைவில் செரிமானம் அடைவதற்கான வாய்ப்பும் உள்ளது.

  • உடலுக்குள் செல்லும் உணவை எரிக்கும் சக்தியும் வெள்ளிக்கு உள்ளது. எனவே வெள்ளித் தட்டில் சாப்பிடுபவர்கள் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
  • வெள்ளி தட்டில் சாப்பிடும் போது அந்த உணவானது உடலில் இருக்கும் நிலையற்ற அணுக்களுடன் போராடி பாதிப்படைந்த செல்களுக்கு புத்துணர்ச்சி தந்து அவற்றை முறையாக செயல்பட செய்கிறது.

  • மற்ற உலோகங்களுடன் வெள்ளியை ஒப்பிட்டால் இது நச்சுத்தன்மை அற்றதாகவே கருதப்படுகின்றது. இதில் உள்ளடங்கிய வேதியியல் பொருட்கள் உணவு கெட்டுப்போகாமல் பாதுகாப்பதோடு உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் உருவாவதையும் தடுக்கிறது.
  • வெள்ளித் தட்டில் உணவை சாப்பிடும்போது அது பாக்டீரியாவை எதிர்த்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது. இதனால் பல நோய்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும் அது மட்டுமன்றி உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் வெள்ளி தட்டில் சாப்பிடும்போது பெறமுடியும்.