வெளுத்து வாங்கிய மழை…. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்…. உதவி தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை  மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது. இந்த மழையால்  குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் விவசாய நிலங்களையும் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து தரங்கம்பாடி தாலுகாவில்  மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கான அரசாணை நேற்று வெளியானது. அதேபோல் இன்று தரங்கம்பாடி  தாலுகாவில் உள்ள  1  லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்ப அட்டைதாரர்களுக்கு 11  கோடியே 16 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் நியாய விலை கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மணிக்  கிராமத்தில் உள்ள நியாயவிலை கடையில்  ஆயிரம்  ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளார்.

Leave a Reply