வெளியே வாங்க… கையில் வாங்கிக்கோங்க…. ரொம்ப பெருமையா இருக்கு…. பூரித்து போன குஷ்பு …!!

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்களித்த பிறகு பேசிய குஷ்பு, ரொம்ப சந்தோஷமா இருக்கு. 5 வருஷத்துக்கு ஒரு தடவை இந்த விரலில் மை வருகின்றது. இதுக்காக ஒவ்வொரு முறையும் காத்து கொண்டு இருப்பேன். இன்னைக்கு வேட்பாளர் மட்டுமல்லாமல், என் தொகுதிக்கு வந்து வாக்களித்து இருக்கேன்.

அதுதான் ரொம்ப பெருமை பட வேண்டிய விஷயம். சென்னைக்கு வந்ததுல இருந்து ஒரு தடவை கூட ஓட்டு போடுவதை தவறவிட்டதில்லை. வேட்பாளராக பேசுறதுக்கு முன்னாடி நான் வாக்காளராக பேசணும்னு ஆசைப்படுறேன். மக்கள் வெளியில வரணும், மக்கள் வாக்களிக்கணும். விரலில் மை வருவது பெருமைப்பட வேண்டிய விஷயம். அதுல வரும் பெருமை வேற எதுவுமே இருக்காது.

வெளியில் வாங்க, கையில் மை வாங்கிக்கோங்க. அதுதான் ரொம்ப முக்கியம். வேட்பாளராக ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் தொகுதியில் இருக்கிற எல்லா பூத்துக்கும் நான் போயிட்டே இருக்கேன். நடுவுல தான் இங்க வந்தேன் நான், ரொம்ப சந்தோஷமா இருக்கு என குஷ்பு தெரிவித்தார்.