வெளியான மாஸ் தகவல்…! கமலின் “விக்ரம்” திரைப்படம்…. பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா எங்க நடக்க போகுதுன்னு தெரியுமா?….!!

கமலின் விக்ரம் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை மே முதல் வாரத்தில் துபாயில் நடத்துவதற்குத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதியும், மலையாள நடிகரான பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதனை அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை கமல் மே முதல் வாரத்தில் மிகவும் பிரமாண்டமாக துபாயில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.