1996 ஆம் ஆண்டு காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்தார் அப்பாஸ். முதல் படத்திலிருந்து சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்ட அப்பாஸ் பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவெளி என அடுத்தடுத்த படங்களில் நடித்த வந்தாலும் சில காலத்திலேயே கோலிவுட்டில் இருந்து காணாமல் போனார். தனிப்பட வாய்ப்புகள் பரிபோன பிறகு ரஜினியின் படையப்பா மற்றும் மம்முட்டியின் ஆனந்தம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தஅப்பாஸ் காதலிக்க மரியாதை மற்றும் ஜீன்ஸ் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தனது கவனக்குறைவால் இழந்துவிட்டார்.
குடும்பத்துடன் நியூஸ்லாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியில் செட்டில் ஆகியுள்ள அப்பாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். கடந்த காலத்தை நினைக்கும் போது தற்கொலை எண்ணம் வந்ததாக அப்பாஸ் பகிர்ந்துள்ளார். அப்பாஸின் மனைவி சிறப்பான ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் நிலையில் அவர் பைக் மெக்கானிக்காக இருக்கும் தகவல் அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.