“வெளிநாட்டிற்கு போக வேண்டாம்”…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருகே காரனூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் வெளிநாடு செல்ல போவதாக செந்தில் தனது மனைவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் செந்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.