வெளிநாட்டிற்கு தப்பிய குற்றவாளி…. 3 ஆண்டுகளுக்கு பிறகு…. கைது செய்த போலீசார்….!!

கொலை செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளியை 3 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியை சேர்ந்த தர்மராஜன் என்பவருக்கும், சந்திரன் என்பவருக்கும் இடையே கோவில் தலைவர் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நடைபெற்ற மோதலில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் 18 பேர் அடங்கிய கும்பல் வாலாந்தரவை சேர்ந்த விஜய், பூமிநாதன் ஆகிய 2 பேரை வெட்டி கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த அக்டோபர் மாதத்தில் வாலாந்தரவை கார்த்திக், ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி ஒரு கும்பல் கொலை செய்துள்ளது.

இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி கொலை வழக்கில் ஈடுபட்ட சந்திரன் மற்றும் பாஸ்கரனின் தரப்பினர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரன் கொலை நடந்த அடுத்த நாளே வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சந்திரனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து இறங்கிய சந்திரனை குடியேற்றத்துறை அதிகாரிகள் உடனடியாக பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரை ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *