வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க…. இந்த முறையை பின்பற்றலாம்…. தேர்தல் ஆணையம் பரிந்துரை…!!

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் முறையில் வாக்களிக்க ஏற்பாடு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்று கூறப்படும் என்ஆர்ஐ இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இதற்காக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது அதில் மிக முக்கியமானது நேரடியாக அவர்கள் தற்போது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர் அதற்கு மாற்றாக அவர்களுக்கு பதிலாக நாமினி ஒருவரை நியமனம் செய்து அவர்களை தேர்தலில் வாக்களிக்க வைக்கலாம். அல்லது அவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குப்பதிவு மையங்களை வைத்து தேர்தலில் பங்கு பெற செய்யலாம்.

மூன்றாவது ஆன்லைன் முறையில் செலுத்தப்பட்ட அஞ்சல்களை வாக்குகளாக செலுத்தும் வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இந்நிலையில் தற்போது அந்த மூன்றாவது முறையான மின்னணு மூலம் வாக்குகளை செலுத்தும் முறையை மேற்கொள்வதற்கு அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக இறுதிப் பரிந்துரையை இந்திய தேர்தல் ஆணையம் மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் இருந்து இந்த தகவல் தெரியவந்துள்ளது.