சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் நடந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளாக தினமும் கோவில் மாடு ஒன்று பல சரக்கு கடைக்குள் நுழைந்து தனக்கு பிடித்ததை சாப்பிடுகிறது. அந்த மாடு கடைக்குள் நுழைந்து பொருட்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படுத்தவில்லை.
ஆச்சரியம் என்னவென்றால் மாடு வெல்லம், பொட்டுக்கடலையை மட்டும் தினமும் சுவைத்து செல்கிறது. கடைக்கு வருபவர்களும் மாட்டை தொந்தரவு செய்வதில்லை. மாடும் யாருக்கும் இடையூறு அளிக்காமல் வெல்லம் பொட்டுக்கடலையை மட்டும் சுவைத்து விட்டு அங்கிருந்து செல்கிறது. இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது