“வெற்றி நடைபோடும் தமிழகம்” – விளம்பரத்துக்கு ரூ.64.72 கோடி…!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அதிமுக அரசு தான் செய்த சாதனைகளை தொலைக்காட்சிகளிலும், தமிழக அரசு பத்திரிகைகளிலும் “வெற்றி நடைபோடும் தமிழகமே” என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகிறது. இதனை திமுக அரசு தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தது. மேலும் அரசு நிதியிலிருந்து அதிமுக அரசு ரூபாய் 1000 கோடி செலவழித்து விளம்பரம் செய்து வருகிறது என்றும், இதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வெற்றி நடைபோடும் தமிழகம் என்று விளம்பரங்களுக்கு அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் விளம்பரத்துக்கு அரசு செலவில் ரூ.64 .72 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது எனவும், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தபடாததால் விளம்பரம் செய்ததில் தவறில்லை எனவும்  உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *