வெறும் 12MLAகளோடு ஷிண்டே…! அப்பறம் நடந்த ட்விஸ்ட்…. நச்சுனு விவரித்த அண்ணாமலை …!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மகாராஷ்டிராவில் இந்த ஆட்சி எப்படி உருவானது, ஆட்சி எப்படி கலைந்தது என்று இரண்டரை ஆண்டுகள் கழித்த பின்பு ஒரு நிமிடம் நாம் பின்னோக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயநலவாதிகளுடைய கூடாரம் மூன்று கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்தார்கள். தமிழகத்திலே காங்கிரசும், திமுகவும் இருப்பது போல பாருங்க எப்படி எல்லாம் அமைந்து வருகிறார்கள் என்று.

எந்தவிதமான கொள்கை அடிப்படையில் இருவருக்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது. சிவசேனா, நேஷனலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டி, காங்கிரஸ் கட்சி மூன்று பேர். தனி கட்சியாக 105 எம்எல்ஏக்கள் பெற்ற பாரதிய ஜனதா கட்சியை தள்ளிவிட்டு 57 எம்எல்ஏக்கள் பெற்றிருந்த சிவசேனா முதலமைச்சர் பதவி எடுத்துக் கொண்டது. அதன் பின்பு இரண்டு அமைச்சர்கள் எப்படி எல்லாம் பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களை கொடுமைப்படுத்த முடியுமோ. அவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள்.

மிக முக்கியமாக மகாராஷ்டிராவின் உடைய உள்துறை அமைச்சர் அனில் தேஸ் முக் அவர்கள்,  பாரதிய ஜனதா கட்சியினுடைய எண்ணிலடங்கா தொண்டர்கள் தமிழகத்தை போல குண்டர் சட்டம், சமூக வலைதளத்திலே சரத் பவாரை பற்றி ஒரு 23 வயது பெண் தவறாக பதிவு செய்து விட்டார் என்பதற்காக 34 நாட்கள் சிறையில் இருந்து இப்போதுதான் வெளியே வந்தார்கள். எண்ணிலடங்கா கொடூரங்கள் , சாதுக்கள் கொல்லப்பட்டார்கள், யாருக்கும் எந்த கேள்வி இல்லை.

நம்முடைய உதவ் தாக்கரே அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு, காதை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். எல்லாரும் கேட்டார்கள் இது வந்து பால சாஹேப் கேஷவ் தாக்கரே அவர்கள் ஆரம்பித்த இயக்கம் கிடையாது,  இது வேறு எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது என்று கேட்டபோது…. எதற்கும் பதில் அளிக்காமல் பாரத பிரதமரை சீண்டி பழித்து பேசி,  இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு அந்த உள்துறை அமைச்சர் அனில் தேஸ் முக் எங்கு இருக்கிறார் என்றால்…. அவருடைய சொந்த கூட்டணியில் இருக்கக்கூடிய சிவசேனா கவிழும் பொழுது அதைக் கேட்பதற்கு கூட வழி இல்லாமல் சிறையில் இடி கேசில் கடந்த ஐந்து மாதமாக சிறைச்சாலையில் அனில் தேஸ் முக் மகாராஷ்டிராவின் உடைய உள்துறை அமைச்சர் சிறையில் இருக்கின்றார்.

நவாப் மாலிக் என்று சொல்லக்கூடிய இன்னொரு மந்திரி….  பேசாத பேச்சுக்கள் இல்லை, குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினுடைய காரிய கர்த்தர்களை ஒரு ஒருவராக இனம் கண்டு, இனம் கண்டு ஜெயிலில் அடைத்த பெருமை வந்து நவாப் மாலிக் அமைச்சருக்கு….. இன்றைக்கு நவாப் மாலிக் வந்து அந்த அமைச்சரும் கூட மூன்றரை மாதங்களாக சிறையில் இருக்கின்றார்.

நிலைமை என்னவென்றால் இரண்டரை ஆண்டுகள் கழித்த பின்பு இன்றைக்கு சிவசேனாவை சார்ந்த ஒரு மனிதர் அங்கு இருக்கக்கூடிய ஏக் நாத் அவர்கள் தன்னுடைய சொந்த உதவ் தாக்கரேவை எதிர்த்து அங்கு இருந்து வெளியே வந்து, ஒரு புரட்சிக் கொடியாக…  புரட்சிக் கொடி ஏற்படுத்தி… வெளியே வந்தது என்னமோ 12 பேருடன் தான் வெளியே வந்தார். அவர் வெளியே வரும்போது வெறும் 12 பேர். அவர் சூரத்துக்கு சென்றார் எப்படி சென்றார் ?

சிவசேனா முதலமைச்சர், நேஷனலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டியினுடைய உள்துறை அமைச்சர் நீங்கள் இருக்கின்ற மாநிலத்தில் மகராஷ்டிராவின் உடைய போலீஸ் பாதுகாப்பு செய்து மகாராஷ்டிராவை கிராஸ் பண்ணி விட்டார்கள்.ஆட்சியிலே நீங்கள் இருக்கலாம் பின்னாடி என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாது ? இது ராஜ தர்மம். நடக்க வேண்டிய நேரத்தில் அது நடக்கும், மகாராஷ்டிராவுக்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து அது நடந்தது.

தமிழ்நாட்டிற்கு பார்ப்போம். மகாராஷ்டிரா போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு, மகாராஷ்டிரா பார்டரை தாண்டி குஜராத் சூரத்திற்கு சென்றார், அங்கே இருந்து அகமதாபாத்தில் இருந்து சூரத்திலிருந்து கௌஹாட்டிக்கு செல்லும் போது இந்த 12 என்பது 17 ஆக மாறி 19 ஆக மாறி கௌஹாட்டியிலே 39 ஆக மாறியது. அதாவது 57 எம்எல்ஏக்களில் இருந்து ஆளும் கட்சி சிவசேனாவின் உடைய நிலைமை என்னவென்று பார்த்தால் வெறும் 13 எம்எல்ஏக்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சியினுடைய தலைவராக உதவ் தேவ் தாக்கரே சொல்லிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *