இந்தியாவின் தேசிய விளைாட்டாக ஹாக்கி இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தது கிரிக்கெட்தான். அதன்படி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு மாணவி 360 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடி அசத்தியுள்ளார்.

மாணவி மூமல் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை முன்னாள் கிரிக்   கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தன் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இந்தியவீரர் சூர்யகுமார் யாதவ் ஸ்டைலில் கிரிக்கெட் விளையாடும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியின் பெயர் மூமல் மெஹார் என குறிப்பிட்டு உள்ளார். உங்கள் பேட்டிங்கை ரசித்தேன் என்று மூமலை புகழ்ந்திருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர்.