வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடங்கள்…. 4-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. பயங்கர சம்பவம்…!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. 23 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 45 பணியாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசாயன மருந்து கலக்கும் கட்டிடத்தில் மருந்து கலக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது உராய்வின் காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த 7 அறைகள் தரைமட்டமாகியது. இதில் ஏராளமான பணியாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகர்சாமி, கனகரத்தினம், முருகேசன் உட்பட 10-க்கு மேற்பட்ட பணியாளர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த பெரியசாமி, குமார், வீரகுமார் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் படுகாயமடைந்த முருகேசன் என்பவர் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *