வெங்காயம் பிடிக்காதவர்கள் கட்டாயம் இத படிங்க… படிச்சா சாப்பிடுவீங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள்.

நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

குளிர்காலத்தில் மிகவும் பிரச்சனையானது இருமல், காய்ச்சல், தோல் பிரச்சினை. நீங்கள் வெங்காயத்தை உட்கொண்டால் அனைத்திலிருந்தும் நிவாரணம் பெற முடியும். பெண்களுக்கு மிகப் பெரிய ஆபத்து மார்பக புற்றுநோய். இது ஆரம்ப காலத்தில் தெரியாது. வெங்காயத்தை தவறாமல் உட்கொண்டால் மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். நம் உடலை சூடாக வைத்திருக்க இது உதவுகிறது. குளிர்காலத்தில் உட்கொள்வதால் உடல் வெப்பம் அடையும்.

வெங்காயம் நரம்புகளை கவனித்துக் கொள்ளவும் உதவுகிறது. வெங்காயம் வாயின் சுவையை சம நிலை படுத்துவதுடன், ஈறு தொற்று மற்றும் வாய் நோய்களின் அபாயத்தை குறைக்கும். வெங்காயம் நம் செரிமானத்திற்கும், எடை குறைப்பு இருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சிவப்பு வெங்காயத்தில் குர்செடின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது. இது உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவுகிறது. எனவே,வெங்காயம் உட்கொள்வது நம் உடலுக்கு நன்மை பயக்கும்.