தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செவிலியர் சபீனா. இவர் வயலூரில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கு உதவி செய்வதற்காக சென்றார். அப்போது இவர் ஜிப்லைன் மூலமாக ஆற்றைக் கடந்தார். இது தொடர்பான குறும்படம் ஒன்று நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதனால் இந்த வீர பெண்மணிக்கு தற்போது தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது அறிவித்து கௌரவித்துள்ளது
இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதை சபீனா பெரும் நிலையில் இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு அவருக்கு முதல்வர் விருது வழங்க இருக்கிறார். மேலும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்காக தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் மீட்பு பணியில் ஈடுபட்டதால் அவரை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இன்று காலை சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி வருகிறார். அந்த வகையில் வயநாடு நிலச்சரிவில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிய அவர் கவுரவித்துள்ளார். மேலும் இந்த வருடத்திற்கான தடகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கும் வழங்கி கௌரவித்துள்ளார்.