வீட்டை “ஜப்தி” செய்த வங்கி அதிகாரிகள்…. தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் சிவசக்தி நகர் முதல் தெருவில் தொழிலதிபரான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பாலகிருஷ்ணன் வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாலகிருஷ்ணன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.