மிக்ஜாம் புயலால் வீடு இழந்த நெசவு தொழிலாளிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் நெசவுத்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீடு மிக்ஜாம் புயலால் முற்றிலும் சேதமானது. சேதமடைந்த வீட்டை கைத்தறி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு புதிய வீடு கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மத்திய அரசு கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் 1.5 லட்சம் தமிழ்நாடு அரசு நிதியின் கீழ் 2.5 லட்சம், அமைச்சரின் சொந்த நிதி 3 லட்சம் என 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டது. புதிய வீட்டை கைத்தறி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார். பின்னர் ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.