வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கல்லால் தாக்கப்பட்ட பெண்….போலீஸ் வலைவீச்சு…..!!!!

பெண்ணை தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோணப்பை பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் முருகன் நகரில் விசைத்தறி உரிமையாளரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரோஜா தனது உறவினர்களான வள்ளி, லட்சுமி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் சரோஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 1/4 போன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் கண்விழித்து பார்த்த சரோஜா சத்தம் போட்டதால் மர்ம நபர் தனது கையில் வைத்திருந்த கல்லால் சரோஜாவை பலமாக தாக்கி விட்டு சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து காயமடைந்த சரோஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.