வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் உஷார்!

ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் விதவிதமான உணவு வகைகளை சமைத்து சாப்பிடுகின்றனர். குறிப்பாக, காரசாரமாக வறுக்கப்பட்ட உணவுகளுக்கு மக்கள் அடிமையாகியுள்ளனர். கொழுப்பு வகைகளை உணவில் எந்தளவுக்கு சேர்த்துக் கொள்கிறோமோ அந்தளவுக்கு அபாயம் இருப்பதாக மருத்துவ ஊட்டச்சத்து என்ற அமெரிக்க இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழுப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களை ஆராய்ச்சியில் உட்படுத்தி அமெரிக்க இதழ் முடிவு வெளியிட்டுள்ளது. கொழுப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களுக்கு கவனக் குறைபாடு இருக்கும் எனவும் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான உணவு வகைகளால் மூளை பாதிக்கும் ஆபத்து உண்டாகும் எனவும் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *