வீட்டில் தனியாக இருந்த நபர்…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள செங்கல்சோலையில் ரியல் எஸ்டேட் அதிபரான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவரான விக்னேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் சிவா தனது வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் அத்துமீறி அவரது வீட்டிற்குள்ளே உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் சிவாவை அந்த மர்ம நபர்கள் சவுக்கு கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிவாவுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிவாவின் கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவன் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *