புதுச்சேரியில் ஆன்லைன் வாயிலாக ரூ 1,68,000 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என whatsapp மெசேஜ் ஒன்றை நம்பி குறிப்பிட்ட செயலி மூலம் 36,000 முதலீடு செய்து ஏமாந்துள்ளார். சூர்யா என்பவரும் இதே போன்று 71 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். இதேபோல் மேலும் 4 பேரிடம் ஆன்லைன் வாயிலாக பண மோசடி நடைபெற இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.