வீட்டிலிருந்து கரப்பான் பூச்சியை விரட்ட…. இதை மட்டும் செய்யுங்கள்….!!!!

உலக மக்கள் அனைவருக்கும் தங்கள் சமையல் அறையில் ஒரே பிரச்சனையாக இருப்பது கரப்பான் பூச்சி மட்டும்தான். அதனை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனால் அவை முடிந்தபாடில்லை. கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான் பூச்சி மட்டுமே. இதை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளை கருவில் 2 ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர், இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கரப்பான் பூச்சி வரும் இடங்கள், அட்டைப் பெட்டிகள், மூலைகளில்  வைத்தால் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கும்.

கரப்பான் பூச்சிகளை விரட்ட இரண்டு முதல் மூன்று கப் வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு கரப்பான் பூச்சிகள் நடமாடும் பகுதிகளில் அந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால் கரப்பான் பூச்சிகள் அங்கிருந்து ஓடிவிடும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபட பேக்கிங் சோடா உடன் சிறிது சர்க்கரை சேர்க்கவும். அதனை கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்கவும். இதனால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும். புதினா எண்ணெயில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். அதை கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கிடைத்தால் அதன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.